தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு + "||" + BSF jawan killed in Pak firing along IB in Jammu

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். #PakistanArmyViolates
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையில் உள்ள நிலைகளை குறிவைத்து  பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.  இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பி.எஸ்.எப். வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 

வீர மரணம் அடைந்த வீரர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள  கிரிதி பகுதியைச்சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் சிதராம் உபத்யாய் (வயது 28) என்பதாகும். இவருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் உபத்யாய் இணைந்துள்ளார். 

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் பொதுமக்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் அத்துமீறலால் எல்லைப் பகுதியில் 3-கி.மீதொலைவில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.