தேசிய செய்திகள்

காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம் + "||" + Happy that Mr Pranab Mukherjee told the RSS what is right about Congress' ideology: p chidambaram

காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம்

காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம்
காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ப சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசப்போகிறார் என தகவல்கள் வெளியானபோது, அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்புகளை மீறி பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் எனவும், மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தார்.  பிரணாப் முகர்ஜியின் உரைக்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட காங்கிரஸ் அவரது கருத்தை வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்தது. 

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தனது டுவிட்டரில், பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கள் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து, ப சிதம்பரம் கூறியிருப்பதாவது:- “  ஆர்எஸ்எஸ் கொள்கை தவறு என்பதை பிரணாப் வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கொள்கைகள் சரி என்று கூறியதன் மூலம் ஆர்எஸ்எஸ் கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி விமர்சித்துள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மக்களவையில் இருந்து 26 அதிமுக எம்.பிக்கள் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம்
அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக மக்களவையில் இருந்து 26 அதிமுக எம்.பிக்கள் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2. இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் : பிரணாப் முகர்ஜி பேச்சு
இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.
3. ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்
டெல்லியில் ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீது இன்று விசாரணை
டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.