தேசிய செய்திகள்

மும்பையில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை: மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் + "||" + Mumbai warned of ‘extremely heavy rain’ today, people advised to stay indoors

மும்பையில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை: மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்

மும்பையில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை: மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்
மும்பையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பை,

மும்பை மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று(ஜூன் 8) முதல் 10 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மக்கள் வீடுகளிலேயே இருக்கமாறும் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மிக கனமழை பெய்யும் பட்சத்தில் மும்பை நகரில் பெரியளவில் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.எனவே கனமழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.மும்பையில் வெள்ளம் சூழ்ந்து விடாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி முடுக்கிவிட்டு உள்ளது.

மாநகராட்சி துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் என மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் அனைவரது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த 2 நாட்களும் அதிகாரிகள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. மும்பை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
மும்பை வடமேற்கு பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீ அணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
2. திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 103 மி.மீ பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 103 மில்லி மீட்டர் மழை பதிவானது.
3. மும்பையில் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு
மும்பையில் மெத்தனால் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.
4. திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை: வீடு-கோவில்களில் தண்ணீர் புகுந்தது
திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் வீடு-கோவில்களில் தண்ணீர் புகுந்தது.
5. மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.