மாநில செய்திகள்

அம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் தொடங்கி வைத்தார் + "||" + Amma full body experimental center: the chief initiator

அம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

அம்மா முழு உடல் பரிசோதனை மையம்:  முதல்வர் தொடங்கி வைத்தார்
அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். #CMPalanisamy
சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதல்வர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும், புதிய உடல் பரிசோதனை மையமாக இது உருவாகி உள்ளது. மேலும் இந்த மையத்தில் ரத்த பரிசோதனை முதல் மார்பக வரைவு, எலும்பு தின்மை அளவீடு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் செய்துகொள்ள முடியும்.


 3 விதமான திட்டங்கள் அறிமுகம்

அம்மா கோல்ட் திட்டத்தின் கீழ் 1000 செலுத்தி 60 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

அம்மா டைமண்ட் திட்டத்தின் கீழ் 2000 செலுத்தி 65 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

அம்மா பிளாட்டினம் திட்டத்தின் கீழ் 3000 செலுத்தி 70 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் தரை தளத்தில் அமைந்துள்ள இந்த பரிசோதனை மையம் முழுவதுமாகக் குளிரூட்டப்பட்டுள்ளது. எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனைகளுக்காக 7338835555 மற்றும் 044-2566611 என்ற எண்களில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்று கருதப்படுகிறது. இந்த துவக்க விழாவில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.