கிரிக்கெட்

போட்டிப் போட்டு செல்பி வீராட் கோலியின் மெழுகு சிலையின் காது பகுதி உடைந்தது + "||" + Virat Kohli's wax statue damaged at Madame Tussauds during unveiling: Report

போட்டிப் போட்டு செல்பி வீராட் கோலியின் மெழுகு சிலையின் காது பகுதி உடைந்தது

போட்டிப் போட்டு செல்பி வீராட் கோலியின் மெழுகு சிலையின் காது பகுதி உடைந்தது
டெல்லி மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ள வீராட் கோலியின் மெழுகு சிலை முன் போட்டி போட்டு ரசிகர்கள் செல்பி எடுததால் காது பகுதி உடைந்தது. #ViratKohli
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை  டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில்  நேற்று வைக்கப்பட்டது . டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. 

ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைந்து உள்ளார்.

வீராட் கோலி சிலையை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அதன் முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர்.

ரசிகர்களின்  இந்த செயலால்  வீராட் கோலியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்து உள்ளது. உடனடியாக அதிகாரிகள் சிலையை அகற்றி, பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர். நிலைமைக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டியிருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
2. ரசிகரிடம் மோசமாக நடந்து கொண்ட வீராட் கோலி
இந்திய அணியின் தலைவரான கோலி ரசிகர் ஒருவர் ஆசையாக கொடுத்த புகைப்பட பிரேமை வாங்கி பார்க்காமல் அப்படியே தன்னுடைய செக்யூரிட்டியிடம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. #viratkohli #indiacricketteam
3. இந்திய அணியில் வெடிக்கும் சர்ச்சை ரவி சாஸ்திரி - கோலிக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி..?
இந்திய அணியில் வெடிக்கும் சர்ச்சை ரவி சாஸ்திரி - கோலிக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
4. இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது.
5. தன் மீதான விமர்சனத்தை தகர்த்தெறிந்த தெண்டுல்கரின் மகன் அர்ஜூன்
தனது முதல் 2 ஓவர்களில் தான் தேர்ந்து எடுக்கப்பட்டது குறித்தான விமர்சனத்தை தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் தகர்த்தெறிந்து உள்ளார்.