மாநில செய்திகள்

இந்த ஆண்டும் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி + "||" + This year is June 12th Mettur dam is not open Chief Minister Edappadi Palinasamy

இந்த ஆண்டும் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்த ஆண்டும் ஜூன் 12ல்  மேட்டூர் அணை  திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மேட்டூர் அணையில் குறைவான நீர் இருப்பதால் இந்தாண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க இயலாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalinasamy
சென்னை

சட்டசபையில்  விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறியதாவது:-

கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட நேரத்தில் அதாவது ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை. அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க இயலாது. இந்தாண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.

சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க மும்முனை மின்சாரம் 12 மணிநேரம் வழங்கப்படும். ரூ.22 கோடியில் 500 மோட்டார் பம்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். 

சூரிய சக்தி மூலம் மோட்டார் இயக்கும் விவசாயிகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...