தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் பேச்சு இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றை நினைவு கூறும் வகையில் இருந்தது: ஆர்.எஸ்.எஸ் + "||" + Mukherjee's speech reminded glorious history of India: RSS

பிரணாப் முகர்ஜியின் பேச்சு இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றை நினைவு கூறும் வகையில் இருந்தது: ஆர்.எஸ்.எஸ்

பிரணாப் முகர்ஜியின் பேச்சு இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றை நினைவு கூறும் வகையில் இருந்தது: ஆர்.எஸ்.எஸ்
பிரணாப் முகர்ஜியின் பேச்சு இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றை நினைவு கூறும் வகையில் இருந்தது என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. #RSS
நாக்பூர்,

ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டது  பெருத்த  விவாதப்பொருளானது. கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, “  மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப் போய்விடும்.மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்” என்று பேசினார். 

பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை முதலில் விமர்சித்த காங்கிரஸ், அவரது உரைக்கு பிறகு வரவேற்று கருத்து தெரிவித்தது.  

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ், பிரணாப் முகர்ஜியின் பேச்சு இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றை நினைவு கூறும் வகையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. 

இது குறித்து ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர்  அருண் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- “ நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றை நினைவு கூறும் வகையில் பிரணாப் முகர்ஜியின் உரை அமைந்து இருந்தது. தற்போது நமது மாநில அமைப்புகள் மாறி இருக்கலாம். ஆனால், கோட்பாடுகள் அப்படியேதான் உள்ளன. பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவையே பாரதத்தின் அடித்தளம் என்பதை சீர்தூக்கி பேசினார்.  எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசம் பற்றி கருத்து உரையாடலை  பலப்படுத்தியமைக்காக பிரணாப் முகர்ஜிக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.