தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டம் ? மும்பை போலீஸ் உளவுத்துறைக்கு தகவல் + "||" + Prime Minister to kill Modi Maoists plan? Mumbai Police Information for intelligence

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டம் ? மும்பை போலீஸ் உளவுத்துறைக்கு தகவல்

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டம் ? மும்பை போலீஸ் உளவுத்துறைக்கு தகவல்
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு உள்ளதாக மும்பை போலீஸ் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளது. #PMModi
மும்பை

மகாராஷ்டிர மாநில போலீசார் மாவோயிஸ்ட்கள் 5 பேரை கைது  செய்தனர் . மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் ரோனா ஜேக்கப் என்பவரை போலீஸ் கைது செய்தது.  கைது செய்யப்பட்ட ரோனாப்பிடம் இருந்து மகாராஷ்டிரா போலீஸ் ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல இருப்பதாக தகவல் வெளியிடபட்டு உள்ளது.மக்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மோடிக்கு குறிவைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ராஜீவ் காந்தி போன்ற நிகழ்வு என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கடித விவகாரம் குறித்து மகாராஷ்டிரா போலீஸ்  உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளது. இதை தொடர்ந்து   பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு  உள்ளது.