தேசிய செய்திகள்

குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜகுவார் விமானம் மோதி விபத்து + "||" + IAF Jaguar aircraft crashes in Gujarat pilot ejects safely

குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜகுவார் விமானம் மோதி விபத்து

குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜகுவார் விமானம் மோதி விபத்து
குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜகுவார் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. #IAF #JaguarAircraft
ஜாம்நகர்,

ஜாம்நகரில் இருந்து வழக்கமான பயிற்சி பணிக்காக சென்ற விமானம் மோதி விபத்துக்குள் சிக்கியது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விமானம் தரையிறங்க முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. விமானி அதிர்ஷ்டவசமாக வெளியே குதித்து உயிர்தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு இதேபோன்று ஜாம்நகரில் இருந்து புறப்பட்டு சென்ற ஜகுவார் விமானம் மோதி விபத்துக்குள் சிக்கியது. அதில் விமானத்தை ஓட்டிய மூத்த அதிகாரி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.