தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்க்கும் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கொலை மிரட்டல் + "||" + After PM Modi, Maha CM makes it to maoist's hit-list

பிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்க்கும் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கொலை மிரட்டல்

பிரதமர் மோடியை தொடர்ந்து  தேவேந்திர பட்னாவிஸ்க்கும்  மாவோயிஸ்டுகளிடம் இருந்து கொலை மிரட்டல்
பிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்க்கும் மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் கடிதம் அனுப்பியது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PMModi #DevendraFadnavis #maoist's
மும்பை,

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல நக்சலைட்டுகள்  திட்டம் தீட்டியிருப்பாக மகாராஷ்டிர மாநில போலீசார் மாவோயிஸ்டுகள் 5 பேரை கைது  செய்து அவர்களிடம் இருந்து கைப்பற்ற ஒரு கடிதம் மூலம் தெரிய வந்தது. இது தொடர்பாக உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்தநிலையில் மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பதாருக்கு மாவோயிஸ்டுகள் அமைப்புகளிடம் இருந்து 2 மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 2 மிரட்டல் கடிதத்திலும் சமீபத்தில் நடந்த காட்சிரோலி துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மராட்டிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திரபட்னாவிஸ்க்கும் நக்சலைட்டுள் மிரட்டல் விடுத்த சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.