தேசிய செய்திகள்

10 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கென்ய பெண் + "||" + Haryana: 10 men gang-rape Kenyan woman after offering her lift

10 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கென்ய பெண்

10 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கென்ய பெண்
கென்ய நாட்டைச் சேர்ந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி

கென்ய நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், டெல்லியில் வேலைபார்த்து வருகிறார். தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்தர்புரா பகுதியில் தங்கியிருந்து வேலைக்குச் செல்வது வழக்கம். புதன்கிழமை இரவு குருகிராமில் நண்பர்கள் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டார். பின்னர் சதுர்பூர்  வீட்டுக்குச் செல்வதற்காக, எம்.ஜி.சாலையில் உள்ள பிரிஸ்டல்  அருகே வாடகை காருக்காகக் காத்திருந்தார்.

அப்போது அவர் அருகே, ஒரு சொகுசு கார் வந்து நின்றது. அதில் மூன்று பேர் இருந்தனர். எங்க போகணும். நாங்க டிராப் பண்றோம்  என்றனர். நேரம் ஆகிக் கொண்டே சென்றதால் வாடகைக் காரும் வராததால் , அவர்களை நம்பி அந்தக் கென்ய பெண், ஏறினார். காருக்குள் ஏறியதும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். பின்னர் சிறிது தூரம் சென்றதும் அவர்களின் இரண்டு நண்பகள் காரில் ஏறிக்கொண்டனர். அனைவரும் மதுபோதையில் இருந்தனர்.

பின்னர் மறைவான ஓர் இடத்தில் காரை நிறுத்தி அவர்கள் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், மேலும் 5 பேர் அழைத்து வரப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர்களிடம் இருந்து அவர் தப்பி ரோந்து சென்ற  போலீசாரிடம் புகார் கூறி உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியதாவது:-

அவர்கள் கவுரவமானவர்களாக இருந்தார்கள், அதனால் நான் அவர்களது அழைப்பை  ஏற்றுக்கொண்டேன். நான் கார் உள்ளே உட்கார்ந்ததும், அவர்கள் என்னிடம் தவறாக நடக்க தொடங்கினர் . அவர்கள் காரை  கோல்ஃப் கோர்ஸ் ரோடிற்கு கொண்டுச் சென்றனர்.

சில தூரத்திற்கு வாகனம் ஓட்டிய பிறகு , அவர்கள் ஒரு வீட்டிக்கு  வெளியே நிறுத்தினர். 3 பேர் என்னை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஏற்கனவே 2 பேர் இருந்தனர். அவர்கள் 5 பேரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறிது நேரம் கழித்து, அவர்கள் மேலும் ஐந்து பேரை அழைத்து வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். 

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் கூறியதாவது:-

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தண்ணீர் டாங்கர்கள் அல்லது கட்டுமான பொருட்களை சப்ளை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கதா கிராமத்தில் அலுவலகத்தில் உள்ள  அறை ஒன்றில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். 3 பேரை கைது செய்து உள்ளோம். தலைமறைவான  2 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.