தேசிய செய்திகள்

இந்திய ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை + "||" + Hospital owner claims Rs 16 crore from army for treating jawan son

இந்திய ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை

இந்திய ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க  ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை
இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மகனின் தலைக்காயத்துக்கு சிகிச்சை அளித்த ஆயுர் வேத மருத்துவமனை ஒன்று ராணுவத்திடம் மருத்துவ செலவாக ரூ.16 கோடி கோரி உள்ளது.
சவுரவ்ப் ராஜவத், காலாட்படைப் பிரிவில்  ராணுவ வீரராக உள்ளார். இவர்  ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றின்  உரிமையாளரின் மகன் ஆவார்.

பிந்த் மாவட்ட நிர்வாகத்தின் தகவல் படி ரான் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஐ.ஏ. ராஜவத் தனது மகன் சவுரவ்பிற்கு  2014 ஆம் ஆண்டு முதல் 2017 வரை சிகிச்சையளித்தார். அதற்கு ரூ 16 கோடி மருத்துவ செலவாக ராணுவத்திடம் கோரி உள்ளார்.

ராஜவத்திற்கு  சொந்தமான மருத்துவமனையானது ஆயுர்வேத மருத்துவமனையாக இருந்தாலும், சவுரப் ராஜவத்திற்கு  ஆங்கில மருத்துவ  சிகிச்சையும் அளிக்கப்பட்டு  உள்ளது.

மருத்துவமனையின் செயல்பாட்டைக் கவனிக்குமாறு  மாவட்ட நிர்வாகம் ராணுவ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் கடமையாற்றிய சவுரவ்ப் ராஜவத்  தலையில் காயம் ஏற்பட்டதுடன், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். "அவர் 2014 ஆம் ஆண்டில் வீட்டுக்கு வந்தார், அதன் பிறகு அவர் முழுமையாக  குணமடையவில்லை என அப்பாவிடம்   சிகிச்சை பெற்றார்.இந்த சிகிச்சை 2017 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இராணுத்திற்கு இது தொடர்பாக  16 கோடி ரூபாய்க்கு மருத்துவ பில் வந்த போது இந்த விவகாரம் வெளி வந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்
இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ராணுவம் இந்த தகவலை மறுத்துள்ளது.
2. இந்தியாவின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தி விட்டோம் - பாகிஸ்தான்; இந்திய ராணுவம் மறுப்பு
இந்தியாவின் உளவு ட்ரோனை எல்லையில் சுட்டு வீழ்த்தி விட்டோம் என பாகிஸ்தான் கூறியதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
3. இந்திய ராணுவம் மீது கொடூர தாக்குதல் நடத்த முயற்சி; பாகிஸ்தானிய படையினரின் ஊடுருவல் முறியடிப்பு
இந்திய எல்லையில் கொடூர தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் வந்த பாகிஸ்தானிய எல்லை அதிரடி படையினரின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
4. இந்திய ராணுவத்தில், முதல் முறையாக 3 புதிய ரக பீரங்கிகள்
இந்திய ராணுவத்தில், கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக புதிய ரக பீரங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
5. இன்று இந்தியா- பாகிஸ்தான் ராணுவ இயக்குனர் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை
இந்தியா- பாகிஸ்தான் ராணுவ இயக்குனர் ஜெனரல்கள் இடையேயான பேச்சு வார்த்தை இன்று நடைபெற உள்ளது. ராணுவம் வீரர்கள் கொலை, ஊடுருவல் ஆகியவற்றிற்கு எதிராக இந்தியா கண்டனம் தெரிவிக்கும்.