தேசிய செய்திகள்

பூமியை போன்று புதிய கிரகத்தை கண்டு பிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை + "||" + Scientist At Mount Abu Observatory Make India Proud, Discover New Planet 600 Light Years Away

பூமியை போன்று புதிய கிரகத்தை கண்டு பிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை

பூமியை போன்று புதிய கிரகத்தை கண்டு பிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
அகமதாபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பூமியை போன்று புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். #NewPlanet
அகமதாபாத்,

அகமதாபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் பி ஆர் எல் என்ற குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது.

இந்த புதிய கிரகம் EPIC 211945201 என்று சூரிய குடும்பத்தில் உள்ளதாகவும், இந்த சூரிய குடும்பத்தில் இந்த கிரகம் மட்டுமே காணப்படுகிறது. இந்த கிரகத்திற்கு EPIC 211945201b என்று இந்திய விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். 

இந்த கிரகம் நாம் வாழும் பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகம் பார்ப்பதற்கு பூமி போன்று இருந்தாலும் பூமியை விட 10 மடங்கு எடை அதிகாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனை சுற்றி 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. 

இந்த கிரகத்தில் உயிரினம் இருக்க வாய்ப்பு இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக புதிய கிரகத்தை ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டை சார்ந்த விஞானிகள் கடந்த மார்ச் மாதம்  பூமியைப் போன்று நிறையுள்ள புதிய கிரகத்தை  கண்டுபிடித்தனர். கே2-229பி (K2-229b) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகமானது பூமியை விட 20 சதவீதம் பெரியதாகவும், 2,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் கொண்டதாக இருக்கிறது. 

இந்த கிரகம் தனது நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் அமைந்திருப்பதால் அங்கு அதிக அளவிலான வெப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. அந்த கிரமானது தனது நட்சத்திரத்தை 14 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இந்த புதிய கிரகத்தை கே2 (K2) என்ற தொலைநோக்கியின் மூலமாக கண்டுபிடித்ததால், இந்த கிரகத்துக்கு கே2-229பி (K2-229b) என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.