தேசிய செய்திகள்

9 நாள் பயணமாக சீனா செல்கிறார் மம்தா பானர்ஜி + "||" + Mamata Banerjee to visit Beijing, Shanghai and Jinan during 9-day China visit

9 நாள் பயணமாக சீனா செல்கிறார் மம்தா பானர்ஜி

9 நாள் பயணமாக சீனா செல்கிறார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பாணர்ஜி 9 நாள் பயணமாக வரும் 22-ம் தேதி சீனா செல்கிறார். #MamataBanerjee
கொல்கத்தா,

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 9 நாள் பயணமாக வரும் 22-ம் தேதி சீனா செல்கிறார். பீஜிங், ஷாங்காய் மற்றும் ஜினான் நகரங்களில் சென்று பார்வையிடுகிறார். அதனை தொடர்ந்து அந்நாடு அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார். 

மேற்கு வங்க மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக சீனாவுடன் இணைந்து செயல்படும் வகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில்,  இந்த சந்திப்பினிடையே கையெழுத்திட உள்ளார்.  மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சீனா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளதால்  மம்தா பானர்ஜியின் இந்த பயணம் சீனா பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது என அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.