தேசிய செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi emplanes for China's #Qingdao, he will be attending the SCO Summit & will hold a bilateral meeting with Chinese President Xi.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சீனா புறப்பட்டுச்சென்றார். சீனாவில் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி,

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவில் உள்ள குயிங்டோ நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா கடந்த ஆண்டுதான் முழு நேர உறுப்பினரானது. இந்தியா இணைந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால் என்பதால், இந்தியா என்னென்ன விஷயங்களை மாநாட்டில் முன்வைக்கப் போகிறது என்பது குறித்து உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் உள்ள நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து, மோடி இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளித்து கருத்துகளை முன்வைப்பார் என்று தெரிகிறது. இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட தலைவர்களையும் மோடி இந்தப் பயணத்தின்போது சந்தித்துப் பேச இருக்கிறார்.

அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹூசைனை அவர் சந்திக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

சுமார் ஒரு மாத கால இடைவேளையில் மோடி இப்போது இரண்டாவது முறையாக சீனா செல்கிறார். முன்னதாக கடந்த ஏப்ரல் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை மோடி சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர்


தொடர்புடைய செய்திகள்

1. தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது : பிரதமர் மோடி பேச்சு
தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
2. சிங்கப்பூரில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் சிங்கப்பூரில் இன்று வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3. முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு
முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது என்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேசினார்.
4. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் : பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி
கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார்.