தேசிய செய்திகள்

மும்பை: ஃபோர்ட் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து + "||" + Massive Fire Breaks Out In Mumbai's Fort Area, 2 Firefighters Injured

மும்பை: ஃபோர்ட் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து

மும்பை: ஃபோர்ட் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து
மும்பையின் ஃபோர்ட் பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மும்பை,

மும்பை ஃபோர்ட் அருகே உள்ள  படேல் சம்பர்ஸ் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலையடுத்து, விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

16 தீ அணைப்பு எந்திரங்கள், 11 டேங்கர் லாரிகள் 150 தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தீ விபத்தில், இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணைக்கு பிறகே தெரியும் என்று தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

மும்பை ஃபோர்ட் பகுதியில், கடந்த 10 தினங்களில் ஏற்படும் 2-வது விபத்து இதுவாகும். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, மும்பை சிண்டியா பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.