உலக செய்திகள்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: ஹபீஸ் சயீத் போட்டியிடவில்லை, 200 வேட்பாளர்களை நிறுத்துகிறார் + "||" + General elections: Saeed not to contest, JuD to run for over 200 seats

பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: ஹபீஸ் சயீத் போட்டியிடவில்லை, 200 வேட்பாளர்களை நிறுத்துகிறார்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: ஹபீஸ் சயீத் போட்டியிடவில்லை, 200 வேட்பாளர்களை நிறுத்துகிறார்
ஹூலை மாத இறுதியில் நடைபெற உள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், ஹபீஸ் சயீத், தனது கட்சி சார்பில் 200 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
லாகூர்,

பாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் களப்பணிகளைத் தொடங்கி உள்ளன. 

இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பும் தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். ஆனால் ஹபீஸ் சயீத் போட்டியிடவில்லை.  அரசியலில் கால் பதித்துள்ள ஜமாத் உத் தவா, மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சி (ஏஏடி) பெயரில் ஜமாத் உத்தவா வேட்பாளர்களை களமிறக்குகிது. 

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு, தீவிர பிரச்சாரத்தை துவங்குவோம் என்று ஹபீஸ் சயீத் கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர். மேலும், எங்கள் வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச்செய்வர் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 


ஆசிரியரின் தேர்வுகள்...