கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா + "||" + Women's Asia Cup T20: India 75/3 in 16.1 overs (Smriti Mandhana 38) beat Pakistan (72/7) by 7 wickets to qualify for final

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
கோலாலம்பூர், 

மகளி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மலேசியவில் நடைபெற்று வருகிறது. ஜூன் -3 ஆம் தேதி  துவங்கிய இந்த தொடர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் இதில் பங்கேற்று விளையாடின. 

குருப் சுற்றுக்கள் முடிந்த நிலையில், பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி, பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த பாகிஸ்தான் அணியுடன் மோதியது. மெய்நிகர் அரையிறுதி போட்டியாக ரசிகர்களால் கருதப்பட்ட இந்த போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. இதையடுத்து, 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 16.1 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.