தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் எல்.பி. ஷாஹி காலமானார் ராகுல் காந்தி இரங்கல் + "||" + Ex-Union Minister L.P. Shahi dead, Rahul condoles

காங்கிரஸ் மூத்த தலைவர் எல்.பி. ஷாஹி காலமானார் ராகுல் காந்தி இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் எல்.பி. ஷாஹி காலமானார் ராகுல் காந்தி இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எல்.பி.ஷாஹி காலமானார். #RahulGandhi #LPShahi
புதுடெல்லி,

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எல்.பி.ஷாஹி (வயது 98) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

சுதந்திர போராட்ட தியாகியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எல்.பி.ஷாஹியின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறியுள்ளார்.

எல்.பி.ஷாஹி 1980-ம் ஆண்டு எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 ல் அவர் முசப்தர்பூரில் எம்.பி. ஆனார்.   எல்.பி.ஷாஹி மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.