உலக செய்திகள்

140 குழந்தைகள் நரபலி கொடுத்து புதைப்பு எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிப்பு + "||" + Over 140 children were sacrificed in Peru for rituals, remains found

140 குழந்தைகள் நரபலி கொடுத்து புதைப்பு எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிப்பு

140 குழந்தைகள் நரபலி கொடுத்து புதைப்பு எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிப்பு
பெருவில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் 140 குழந்தைகள் மற்றும் 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டு உள்ளது. அதன் எலும்புக்கூடுகள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டின் திருஜிலோ  நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது  140 குழந்தைகள் மற்றும் 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு உள்ளது தெரியவந்து உள்ளது.  அந்த சமயத்தில் அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்த கடவுளின் மனதை சாந்தப்படுத்த செய்யப்படும் சடங்காக 140 குழந்தைகள் கொடூரமாக பலி கொடுக்கப்பட்டு  கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர்.

இதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி குழு தலைவர் கேப்ரியல் பிரிட்டோ கூறியுள்ளார். கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 5-லிருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சிகள் சில காலமாகவே நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்முறையாக வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2. காதலன் மீது அமர்ந்து மூச்சு திணற வைத்து கொலை செய்த குண்டு காதலி
அமெரிக்காவைச் சேர்ந்த குண்டுப் பெண் ஒருவர் தனது காதலன் மீதான கோவத்தில் அவர் மீது அமர்ந்து மூச்சடைக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. உலகில் பெரிய நாக்கு: நாக்கை வைத்து நெற்றியை தொடும் நபர்
நேபாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4. பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்த அரசு டாக்டர்
திருவாரூரில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
5. வெஜ் நூடுல்ஸில் மனித சதை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சைவ உணவகம் ஒன்றில், பரிமாறப்பட்ட நூடுல்ஸில் மனித சதை இருப்பதை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.