தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியால் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது அசாதுதீன் ஓவைசி பேச்சு + "||" + Congress is finished, says AIMIM chief Asaduddin Owaisi after Pranab Mukherjee’s RSS visit

பிரணாப் முகர்ஜியால் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது அசாதுதீன் ஓவைசி பேச்சு

பிரணாப் முகர்ஜியால்  காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது அசாதுதீன் ஓவைசி பேச்சு
பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என்று அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். #PranabMukherjee #RSS #AsaduddinOwaisi
ஐதராபாத்,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்றது அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.  

இந்தநிலையில்  அனைத்து இந்திய மஜ்லிக் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்.  விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது.  

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் இருந்தவரும், இந்திய ஜனதிபதியாக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமைய விழாவுக்கு சென்றுள்ளார். 

எனவே இன்னும் இந்த கட்சியின் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் : பிரணாப் முகர்ஜி பேச்சு
இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.