தேசிய செய்திகள்

போலீஸ்காரரை பளார் என அறைந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ மீது வழக்கு + "||" + MP BJP MLA caught on camera slapping constable inside police station

போலீஸ்காரரை பளார் என அறைந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ மீது வழக்கு

போலீஸ்காரரை பளார் என அறைந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ மீது வழக்கு
போலீஸ்காரரை பளார் என அறைந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #BJPMLA
தேவாஸ்

மத்திய பிரதேச மாநிலம் உதயநகர் மாவட்டத்தில் உள்ள  தாவ்ஸ் நகர் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து உள்ளார். அவரை அங்கு காவலுக்கு நின்ற சந்தோஷ் இவானாதி என்ற போலீஸ்காரர் தடுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ  அவரை 2 முறை அறைந்து உள்ளார்.  இவானாதி சில பிரச்சினை காரணமாக  எம்.எல்.ஏ மகனுடன்  ஏதோ விரோதம்  இருந்து உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் உதயநாகர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து உள்ளனர். அப்போது  தடுத்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 353-  332 ஆகிய பிரிவுகளின்  கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ. கருத்துகளுக்கு தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மாவட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் ஷம்பு அகர்வால் "ஒரு பாரபட்சமற்ற விசாரணைக்கு" பிறகு மட்டுமே எந்தவொரு  பதிலும் கூற முடியும் என கூறினார்.

இது குறித்து போலீஸ் சூப்பிரெண்டு அஞ்சுமன் சிங் கூறியதாவது:-

காவல்துறையினர் சில சோதனைகளுக்கு எம்.எல்.ஏ.வை நிறுத்தினர். அதற்கு எம்.எல்.ஏ. எங்கள் அலுவலர்களில் ஒருவரைக் கன்னத்தில் அரைந்ததாக தகவல்  கிடைத்தது. இதை தொடர்ந்து  எம்.எல்.ஏ மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என கூறினார் 

தொடர்புடைய செய்திகள்

1. மாயாவதி எச்சரிக்கையை தொடர்ந்து வழக்குகளை வாபஸ் பெற மத்திய பிரதேச அரசு முடிவு
மாயாவதி எச்சரிக்கையை தொடர்ந்து வழக்குகளை வாபஸ் பெற மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
2. வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் ராஜஸ்தான், ம.பி.யில் ஆதரவை மறுஆய்வு செய்வோம் - மாயாவதி
ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் ஆதரவை மறு ஆய்வு செய்வோம் என மாயாவதி கூறியுள்ளார்.
3. முதல்வர் பதவி பஞ்சாயத்து முடிந்த நிலையில் அமைச்சர் பதவிக்கு போட்டி : காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி
முதல்வர் பதவிக்கான பஞ்சாயத்து முடிந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் அமைச்சர் பதவிக்கான போட்டி காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
4. ராஜஸ்தான், ம.பி. மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு
ராஜஸ்தான், ம.பி. மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
5. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வேட்டுவைத்த நோட்டா!
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு நோட்டா வேட்டு வைத்தது தெரியவந்துள்ளது.