உலக செய்திகள்

ஒரே வாரத்தில் அமெரிக்காவில் அந்தோணி போர்டைன் - கேட் ஸ்பேட் இரு பிரபலங்கள் தற்கொலை + "||" + Anthony Bourdain, Kate Spade suicides highlight need for new depression drugs

ஒரே வாரத்தில் அமெரிக்காவில் அந்தோணி போர்டைன் - கேட் ஸ்பேட் இரு பிரபலங்கள் தற்கொலை

ஒரே வாரத்தில் அமெரிக்காவில் அந்தோணி போர்டைன் - கேட் ஸ்பேட்  இரு பிரபலங்கள் தற்கொலை
ஒரே வாரத்தில் அமெரிக்காவில் அந்தோணி போர்டைன் - கேட் ஸ்பேட் என்ற இரு பிரபலங்கள் தற்கொலை செய்துள்ளது மன சோர்வுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டிய தேவையை காட்டுகிறது.
நியூயார்க்:

அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் (வயது 61). இவர் சமையல் மட்டுமின்றி எழுத்தாளர், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத் தன்மை கொண்டவர். 

உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சிறந்த உணவு மற்றும் பானங்கள் குறித்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அந்தோணி  ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியில் ‘பார்ட்ஸ் அன்நோன்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில்,  பிரான்சில் தங்கியிருந்து பார்ட்ஸ் அன்நோன் சீரியலுக்காக பணியாற்றி வந்த போர்டைன் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தங்களுக்கு பேரிழப்பு என சிஎன்என் தெரிவித்துள்ளது.

அந்தோணி மறைவு தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்தோணி மறைவு குறித்த தகவல் அதிர்ச்சி அளித்ததாகவும், அவரது குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

இது போல்  பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேட் ஸ்பேட் 55 வயதில்  தூக்கிட்டு  தற்கொலை செய்து உள்ளார். கேட் ஸ்பேடுக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில்   140 க்கும் மேற்பட்ட சில்லரை கடைகள் மற்றும் கடைகள் மற்றும் சர்வதேச அளவில் 175 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

1999 ஆம் ஆண்டு முதல் 2018  ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க அறிக்கையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் தற்கொலை விகிதங்கள் அதிகரித்துள்ளன என தகவல் வெளியாகி உள்ளது. இதில்  நடுத்தர வயதான  45 முதல் 64 வயது பெரியவர்கள் வரை அதிகம் உள்ளனர். போர்டைன் வயது 61 , கேட் ஸ்பேட்   வயது 55 ஆகும்.

 ஒரே வாரத்தில் அமெரிக்காவின் இரு பிரபலங்கள் தற்கொலை செய்து உள்ளனர். இது மனச்சோர்வுக்கான மிகவும் பயனுள்ள சிகிச்சைகள் தேவைப்படுகிறது எனபதையே காட்டுவதாக கூறப்படுகிறது. 

அமெரிக்க வணிகக் குழுமத்தின் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்களின் கருத்துப்படி, மனநோயாளிகளுக்காகவும் மனநல சுகாதார பிரச்சினைகள் குறித்தும், மருந்து தயாரிப்பாளர்களிடம் 140 சிகிச்சைகள் உள்ளன. இது சுமார் 1,100 சோதனை புற்றுநோய்க்கான மருந்துகளுடன் ஒப்பிடுகையில்  இவை மிக உயர்ந்த விலையில் சிலவற்றைக் கூறலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர்
இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபிய நபர் ஒருவர் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.
2. அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3. கோமா நிலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம்:மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா
14 வருடங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த கொடூரம் மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா செய்தார்.
4. ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் பதவியைத் துறந்த 2 நாட்களில் மீண்டும் திருப்பம்
ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் தனது பதவியைத் துறந்த செய்தி வெளியான இரண்டே நாட்களில், அவர் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. வைரம் பதிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த மாடல் அழகி உதடு கின்னஸ் சாதனை
வைரம் பதிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த வைரம் பதித்த லிப் ஆர்ட் செய்து வைர நிறுவனம் ஒன்று கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது.