தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக பெற்றிருப்பது பாஜகவின் அதிர்ஷ்டம்: அமித்ஷா கடும் விமர்சனம் + "||" + Amit Shah Calls Rahul Gandhi 'Babua', Says BJP Lucky to Have Him in Opposition

ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக பெற்றிருப்பது பாஜகவின் அதிர்ஷ்டம்: அமித்ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக பெற்றிருப்பது பாஜகவின் அதிர்ஷ்டம்: அமித்ஷா கடும் விமர்சனம்
ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக பெற்றிருப்பது பாஜகவின் அதிர்ஷ்டம் என அமித்ஷா கடுமையாக விமர்சித்தார். #RahulGandhi #AmitShah
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சின்னப்பையன் என விமர்சித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ராகுலை எதிர்கட்சியாக பெற்றிருப்பது பாஜகவின் அதிர்ஷ்டம் என கடுமையாக சாடினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் தங்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித்ஷா கூறியதாவது:-

 “ இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியில் உள்ளது. 
பல மாநிலங்களில் அதிகாரத்தை இழந்துவிட்டு, சில இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றிக்கு திருப்தி  கொள்ளும் எதிர்க்கட்சியை பெற்றிருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாய் பார்க்கிறோம். நாங்கள் எட்டு இடைத்தேர்தல்களில் மட்டுமே தோல்வி கண்டோம். ஆனால், அவர்களிடம் (எதிர்க்கட்சிகள்) இருந்து 14 மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறோம். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அது நடைபெறவில்லை, இது நடைபெறவில்லை என சொல்லிக்கொண்டு இருக்கிறார். 70 ஆண்டுகளாக, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று என்னிடம் கூறுங்கள் சகோதரரே” உங்களில் மூன்று தலைமுறைகள் 70 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்துள்ளனர்.
 கழிப்பறைகள் கட்டுவது, ஏழை தாய்மார்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்குவது போன்ற பணிகளை நீங்கள் செய்து இருந்தீர்களேயானால், இந்த பணிகளை செய்ய வேண்டிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்து இருக்காது. 

ராகுல் காந்தி எப்போது விடுமுறையில் செல்வார், எப்போது திரும்புவார் என்று யாருக்குமே தெரியாது. குஜராத், ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் தகிக்கும் போது அதை சமாளிப்பது கடினம் தான்(கிண்டலாக இவ்வாறு குறிப்பிட்டார்). ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஷ்கர் சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கூடுதல் சிரத்தையுடன் பணியாற்ற வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
2. சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு உள்ளார்.
3. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? - அமித்ஷா எச்சரிக்கை
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அமித்ஷா கூறினார்.
4. பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது - மு.க.ஸ்டாலின் அறிக்கை
பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5. என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா
என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அற்பமானவை என்று சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.