தேசிய செய்திகள்

மலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் வசதி உத்தரகாண்ட் அரசு அறிமுகம் + "||" + Internet: To connect remote villages with Wi-Fi, Uttrakhand launches balloon-based internet

மலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் வசதி உத்தரகாண்ட் அரசு அறிமுகம்

மலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் வசதி உத்தரகாண்ட் அரசு அறிமுகம்
உத்தரகாண்ட்டில் உள்ள மலைகிராமங்களுக்கு ஏர் பலுன் மூலம் இண்டர்நெட் வசதியை அம்மாநில அரசு அறிமுகம்படுத்தி உள்ளது. #balloonbased #internet
டேராடூன்,

இண்டர்நெட் சேவை பெறுவதற்கு நகர்புறங்களில் ஆங்காங்கே செல்போன் கோபுரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் சேவை எளிதாக கிடைக்கின்றது.  இந்த நிலையில் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் இண்டர்நெட் சேவை கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. செல்போன் கோபுரங்கள் அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. அதற்கு கூடுதல் செலவு ஆகும். 

மலைக்கிராமங்களில் இண்டர்நெட் வசதி பயன்படுத்துவதற்கு மும்பை ஐ.ஐ.டி காற்றில் பறக்கும் பலூன் மூலம் செல்போன் இண்டர்நெட் இணைப்பு பெறும் வசதியை கண்டுபிடித்தது.  இந்த வசதியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஏராளமான மலை கிராமங்களுக்கு செல்போன் - இண்டர்நெட் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து உத்தரகாண்ட் மாநில அரசு மலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்முறையாக ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் சேவை வசதியை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ரவத் டேராடூனில் தொடங்கி வைத்தார்.  இந்த ஏர்பலுன் ஏரோஸ் டாட் டெக்னாலஜி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

6 மீட்டர் நீளம் கொண்ட பலூனில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். தரையில் இருந்து ரிமோட் மூலம் இயங்ககூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதில் டிரான்ஸ்ரிசீவர் ஆன்டெனா கருவி பொருத்தப்பட்டு இருக்கும். 

இதன் மூலம் இன்டர்நெட் சேவை வழங்க கூடிய மோடம் இணைக்கப்பட்டு வைபை வசதி மூலம் செல்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் கிடைக்கும். 7.5 கி.மீ. சுற்றளவுக்கு இணைப்புகள் கிடைக்கும்.  இதை யார் வேண்டுமானாலும், பாஸ்வேர்ட் இல்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவிலேயே ஒரு மாநிலம் முழுக்க இண்டெர்நெட் மூலம் இணைக்க பலூனை பயன்படுத்துவது இதுவே முதல்முறை ஆகும்.  இதில் ஒரு பலூனை பறக்க உருவாக்க 50 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்பட்டுள்ளது. 

சுமார் 680 கிராமங்களில் தற்போது இணைய வசதி இல்லை.  இந்த கிராமங்களில் எல்லாம் இந்த பலூன் பறக்கவிடப்பட உள்ளது. சுமார் 1000 பலூன்கள் பறக்கவிடப்படவுள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பலூனில் காற்று ஏற்றி மீண்டும் பறக்க விடப்படும்.  இது தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு என்று தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு அறிமுகப்படுத்திய  இண்டர்நெட் வசதி  அம்மாநில மலைகிராம மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து அம்மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ரவத் கூறுகையில்,

வெள்ளம் போன்ற அவசர காலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இண்டர்நெட் வசதி இல்லாத கிராமங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  தொடக்கத்தில் இன்டர்நெட் இணைப்புகளை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.