உலக செய்திகள்

இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் நிகழ்ச்சியில் தலைப்பாகையுடன் முதல் சீக்கியர் + "||" + Sikh soldier to become first to wear turban for Trooping the Colour ceremony in UK

இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் நிகழ்ச்சியில் தலைப்பாகையுடன் முதல் சீக்கியர்

இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் நிகழ்ச்சியில் தலைப்பாகையுடன் முதல் சீக்கியர்
இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளில் நடைபெறும் வருடாந்திர குதிரை படை அணிவகுப்பில் முதன்முறையாக தலைப்பாகை அணிந்து சீக்கியர் ஒருவர் கலந்து கொள்கிறார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டு அரசி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் ஜூனில் ஏதோ ஒரு சனிக்கிழமை கொண்டாடப்படும்.  இந்த நாளில், ட்ரூப்பிங் தி கலர் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.  இதில் குதிரை படையினர் அணிவகுப்பு நடத்துவர்.

இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் கரடி முடியால் ஆன கருப்பு நிற தொப்பியை அணிவது வழக்கம்.  இந்த நிலையில், இந்த வருடம் நடைபெற உள்ள குதிரை படை அணிவகுப்பில் ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.  இந்த நிகழ்ச்சியில் சரண்பிரீத் சிங் லால் (வயது 22) என்ற சீக்கியர் கலந்து கொள்கிறார்.  அவர் மற்றவர்கள் அணியும் தொப்பிக்கு பதிலாக முதன்முறையாக தலைப்பாகையுடன் காட்சி தருகிறார்.  இது கருப்பு நிறத்தில் இருக்கும்.

சிங்கின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் பார்வையாளர்கள் வரிசையில் அமருகின்றனர்.

இந்தியாவில் இருந்து சிறுவனாக இருக்கும்பொழுது இங்கிலாந்திற்கு வந்த சிங் கூறும்பொழுது, இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் தலைப்பாகை அணிந்து கலந்து கொள்ளும் முதல் சீக்கியர் மற்றும் பாதுகாவலராக இருப்பது என்பது உயரிய மரியாதை ஆகும்.

இதனை வரலாற்றில் ஒரு மாற்றம் ஆக மக்கள் பார்த்திடுவார்கள் என நம்புகிறேன்.

என்னை போன்று, சீக்கியர்கள் மட்டுமின்றி, பிற மதம் மற்றும் பின்னணியை கொண்டவர்களும் ராணுவத்தில் சேர அதிகளவில் ஊக்குவிக்கப்படுவார்கள் என நாம் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இரண்டாம் எலிசபெத் உண்மையில் தனது பிறந்த நாளை ஏப்ரல் 21ந்தேதி கொண்டாடுவார்.  இந்த வருடம் ட்ரூப்பிங் தி கலர் நிகழ்ச்சி இன்று கொண்டாடப்படுகிறது.