தேசிய செய்திகள்

டெல்லியில் பிரபல ரவுடி உள்பட கூட்டாளிகள் 4 பேர் என்கவுண்டரில் கொலை + "||" + Gangster Rajesh Bharti, 3 aides killed in police encounter in Delhi

டெல்லியில் பிரபல ரவுடி உள்பட கூட்டாளிகள் 4 பேர் என்கவுண்டரில் கொலை

டெல்லியில் பிரபல ரவுடி உள்பட கூட்டாளிகள் 4 பேர் என்கவுண்டரில் கொலை
டெல்லியில் பிரபல ரவுடி ராஜேஷ் பார்தி உள்பட கூட்டாளிகள் 4 பேர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர்.
புதுடெல்லி

சத்தீஷ்கர் மாநிலத்தில் சத்தீர்பூர் பகுதியில் டெல்லி போலீசார்  சிறப்பு காவல்துறையுடன் இணைந்து  சந்தேகத்தின் பேரில் நான்கு  நபர்களை கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட  குற்றவாளிகள் ராஜேஷ் பார்தி கும்பலை சேர்ந்தவர்கள் சந்தேகிக்கப்படுகின்றனர், அவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு  ரூ. 1 லட்சம் பரிசு வழங்குவதாக டெல்லி போலீசார் அறிவித்து இருந்தனர். 

இந்த என்கவுண்டரில்  ராஜேஷ்  பார்தியும் கொல்லப்பட்டார். இந்தில் 6 போலிசார் காயம் அடைந்து உள்ளனர்.

ராஜேஷ் பாரதி பிரபல ரவுடி ஆவான்  கொலை, மிரட்டி பணம் பறித்தல், கார் திருட்டு மற்றும் திருட்டு சம்பந்தமாக பல வழக்குகளில் குற்றவாளி ஆவார் , மேலும் அரியானா காவல்துறையின் காவலில் இருந்து தப்பி ஓடியவர் ஆவார்.