உலக செய்திகள்

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீச்சில் குழந்தைகள் உள்பட 50 பேர் பலி + "||" + 50 reported killed in airstrikes on Syrian village

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீச்சில் குழந்தைகள் உள்பட 50 பேர் பலி

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள்  குண்டு வீச்சில் குழந்தைகள் உள்பட 50 பேர் பலி
சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீச்சில் சிரிய மக்கள் 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். #SyrianWar
சிரியாவில் சர்தானா மாகாணம் அருகே உள்ள இடிலிப் நகர் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. எனவே இந்த நகரை கைப்பற்றும் பொருட்டு ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. வான்வழியாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்தவர்களில் 9 பேர் குழந்தைகள். மேலும்,  60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியுள்ளதால், உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும்  என மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறலாம் எனவும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் -வைரலான புகைப்படம்
சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் படுத்திருப்பது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
2. இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர்
இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபிய நபர் ஒருவர் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் பதவியைத் துறந்த 2 நாட்களில் மீண்டும் திருப்பம்
ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் தனது பதவியைத் துறந்த செய்தி வெளியான இரண்டே நாட்களில், அவர் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற வாலிபர்: மற்றொரு கிட்னியில் நோய் தொற்று ஏற்பட்டு அவதி
ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற வாலிபர் மற்றொரு கிட்னியில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
5. தன்னிடம் வேலை பார்த்த இந்திய தொழிலாளியின் சம்பள பாக்கியை வீடு தேடி வந்து கொடுத்த தொழிலதிபர்
சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த இந்திய தொழிலாளியின் சம்பள பாக்கியை வீடு தேடி வந்து கொடுத்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.