மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் + "||" + 11 IPS officers transferred in Tamil Nadu

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ் ஆயுதப்படை ஐ.ஜி.ஆக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை

 உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

1.ஐபிஎஸ் அதிகாரி மனோகரன் ஐஜி பதவி உயர்வுடன் திருப்பூர் கமிஷனராகவும், 

2. சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஐஜி பாஸ்கரனுக்கு, ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

3. திருப்பூர் கமிஷனர் நாகராஜன், போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜியாகவும்,

4. போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தென் மண்டல ஐஜியாகவும்.

5. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை ஐஜியாகவும்,

6. தமிழக காவல்துறை நலன், சென்னை ஐஜி டேவிட்சன் தேவாசிர்வாதம் மதுரை கமிஷனராகவும்

7. மதுரை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், சிபிசிஐடி சிறப்பு பிரிவு ஐஜியாகவும்

8. தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக இருந்த சேஷாயி, தமிழக காவல்துறை நலன் ஐஜியாகவும், 

9. சென்னை குற்றப்பிரிவு ஐஜி பாஸ்கரன், தமிழக பயிற்சி பள்ளி ஐஜியாகவும்

10.போலீஸ் தொழில்நுட்ப சேவை டிஐஜி மகேந்திர குமார் ரத்தோட், நெல்லை போலீஸ் கமிஷனராகவும்,

11. போலீஸ் பயிற்சி பள்ளி டிஐஜி ஆசியம்மாள், தொழில்நுட்ப சேவை டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.