உலக செய்திகள்

இங்கிலாந்து அரசியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஹாரி-மேகன் தம்பதி பங்கேற்பு + "||" + Royal newlyweds attend Queen's birthday parade

இங்கிலாந்து அரசியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஹாரி-மேகன் தம்பதி பங்கேற்பு

இங்கிலாந்து அரசியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஹாரி-மேகன் தம்பதி பங்கேற்பு
இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சமீபத்தில் திருமணம் முடிந்த ஹாரி-மேகன் தம்பதி கலந்து கொண்டனர்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் ஜூனில் வரும் ஒரு சனிக்கிழமையில் கொண்டாடப்படும்.  இந்த நாளில், ட்ரூப்பிங் தி கலர் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.  இதில் குதிரை படையினர் அணிவகுப்பு நடத்துவர்.

அவர்கள் தலையில் கரடி முடியால் ஆன கருப்பு நிற தொப்பியுடனும், சிவப்பு நிறத்திலான மேலாடையும் அணிந்து வரிசையாக அணிவகுத்து செல்வர்.  இந்த நிலையில், இந்த வருட குதிரை படை அணிவகுப்பில் ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் திருமணம் முடிந்த ஹாரி-மேகன் தம்பதி கலந்து கொண்டனர்.  குதிரைகள் பூட்டிய வண்டியில் திரளான கூட்டத்தினரிடையே தம்பதி வந்து இறங்கினர்.  இளவரசர் ஹாரி ராணுவ உடையுடனும், மேகன் மார்கலே பிங்க் நிற ஆடையும், அதே வண்ணத்திலான தொப்பியும் அணிந்து வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத், இளவரசர் சார்லஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து அரசியின் கணவரான பிலிப் கடந்த வருடம் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. அதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார்
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவில் வீட்டின் முன்னால் ரசிகர்கள் திரண்டு நின்றனர்.
2. நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள்; துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், மந்திரிகள் மரியாதை
நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், மந்திரிகள் மரியாதை செலுத்தினர்.
3. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை 2 வருடம் வரை கொண்டாட ஒடிசா அரசு முடிவு
ஒடிசா அரசு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை 2 வருடம் வரை கொண்டாட முடிவு செய்துள்ளது.