தேசிய செய்திகள்

பிரதமரின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் எந்தவொரு அரசியலும் கூடாது; காங்கிரஸ் கட்சி + "||" + There should not be any politics on the issue of PM's security: Cong

பிரதமரின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் எந்தவொரு அரசியலும் கூடாது; காங்கிரஸ் கட்சி

பிரதமரின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் எந்தவொரு அரசியலும் கூடாது; காங்கிரஸ் கட்சி
பிரதமரின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் எந்தவொரு அரசியலும் கூடாது என்று காங்கிரஸ் கட்சி இன்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மகாராஷ்டிராவில் புனே போலீசார் பீமா கோரேகாவன் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை சமீபத்தில் கைது செய்தனர்.  அவர்களில் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர்.

அதில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியை ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது போன்று கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிய வந்து உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு அதிகாரி பவன் கேரா இன்று கூறும்பொழுது, பிரதமரின் பாதுகாப்பு விவகாரம் தீவிரமுடன் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டிய விசயம்.

தீவிரவாதம் மற்றும் நக்சல்வாதம் ஆகியவற்றின் வலியை காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்கிறது.  மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பியாந்த் சிங், வித்யா சரண் சுக்லா மற்றும் பல தலைவர்களை இழந்திருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களை நக்சலைட்டுகள் என போலீசார் கூறுகின்றனர்.  மத்திய மந்திரி அத்வாலே அவர்களை தலித்துகள் என கூறுகிறார்.  இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும்.  இதனை அரசியலாக்க கூடாது என கூறியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் சமீபத்தில் பேசுகையில், இது முற்றிலும் உண்மையற்றது என்று நான் கூறவரவில்லை. இருப்பினும், எப்போது எல்லாம் மோடியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் செய்திகள் பரப்பப்படும். இது பிரதமர் மோடியின் பழைய தந்திரம், முதல்-மந்திரியாக இருந்த போதே இதனை தொடர்கிறார் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி
ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
2. தமிழ்நாடு, புதுச்சேரிக்கு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்கள் நியமனம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3. பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
4. இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு பாதுகாப்பு வழங்கிறது - பிரதமர் மோடி
இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
5. ரபேல் விவகாரத்தில், மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.