மாநில செய்திகள்

சென்னை-கொல்கத்தா சென்ற ஹவுரா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன + "||" + Maharashtra: Three coaches of Howrah Mail train derailed

சென்னை-கொல்கத்தா சென்ற ஹவுரா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன

சென்னை-கொல்கத்தா சென்ற ஹவுரா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன
சென்னையில் இருந்து கொல்கத்தா சென்ற ஹவுரா ரெயிலின் 3 பெட்டிகள் இன்று அதிகாலை மகாராஷ்டிரா அருகே தடம் புரண்டன.

சென்னை,

சென்னையில் இருந்து கொல்கத்தா நோக்கி 12840 என்ற எண் கொண்ட ஹவுரா ரெயில் புறப்பட்டு சென்றது.  அது மகாராஷ்டிராவில் இகாத்புரி ரெயில்வே நிலையம் அருகே இன்று அதிகாலை வந்தபொழுது ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.  இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ரெயில் தடம் புரண்டது ஏன் என்பது பற்றிய தகவல்கள் தெரிய வரவில்லை.