மாநில செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்; டி.டி.வி. தினகரன் + "||" + 18 MLAs sacked are Sabarimala stairs; Ttv Dinakaran

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்; டி.டி.வி. தினகரன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்; டி.டி.வி. தினகரன்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran

சென்னை,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் அதன்பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.  அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சிகளில் தினகரன் தனியாளாக சென்று பங்கேற்று வந்தார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்.  அவர்கள் எங்களுடனேயே இருப்பார்கள் என கூறினார்.

திவாகரன் கட்சி தொடங்குவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், திவாகரன் கட்சி ஆரம்பிப்பது பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  கட்சி என்பது வேறு.  உறவு என்பது வேறு என கூறினார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது பற்றி அவர் கூறும்பொழுது, அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  யார் மீது வேண்டுமானாலும் வழக்கு போடுவார்கள் என கூறியுள்ளார்.

இதேபோன்று தி.மு.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைப்பதற்கு எங்களது கட்சியின் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நிலையான மற்றும் திறமையான அரசு அமைய வேண்டும்; வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
நிலையான மற்றும் திறமையான அரசு அமைய வேண்டும் என வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பேட்டியளித்து உள்ளனர்.
2. சென்னை ஆர்.கே.நகர் போல் திருவாரூர் இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்று சாதனை படைக்கும் டி.டி.வி. தினகரன் பேட்டி
சென்னை ஆர்.கே. நகர் போல், திருவாரூர் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கும் என கும்பகோணத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
3. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அஞ்சுகிறது டி.டி.வி. தினகரன் பேட்டி
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அஞ்சுகிறது என டி.டி.வி.தினகரன் கூறினார்.
4. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்வதாக வெளியான தகவல் வதந்தி சித்தராமையா பேட்டி
காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று சித்தராமையா கூறினார்.
5. கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது டி.டி.வி. தினகரன் பேட்டி
கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது என மன்னார்குடியில், அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.