தேசிய செய்திகள்

ஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு + "||" + Infiltration bid foiled, six militants killed

ஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

ஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
ஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு,

ஜம்முவின் குப்வாரா மாவட்டத்திற்குள் கெரான் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றது.

முஸ்லிம்கள் நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  எனினும், தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.