தேசிய செய்திகள்

மும்பையில் ராகுல் காந்தியை வரவேற்க தயாராகும் ஆயிரம் ஆட்டோ ரிக்சாக்கள் + "||" + 1,000 autos to welcome Rahul Gandhi in Mumbai, says Nirupam

மும்பையில் ராகுல் காந்தியை வரவேற்க தயாராகும் ஆயிரம் ஆட்டோ ரிக்சாக்கள்

மும்பையில் ராகுல் காந்தியை வரவேற்க தயாராகும் ஆயிரம் ஆட்டோ ரிக்சாக்கள்
மும்பை நகருக்கு வருகை தரும் ராகுல் காந்தியை ஆயிரம் ஆட்டோ ரிக்சாக்கள் வரவேற்கும் என அக்கட்சி தலைவர் சஞ்சய் நிருபம் இன்று கூறியுள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மும்பை நகருக்கு சென்று அடிமட்ட தொண்டர்கள் முன்னிலையிலான கூட்டத்தில் உரையாற்றுகிறார்.  காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமைக்கும் மற்றும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே இரு வழி தகவல் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வருகை இருக்கும்.

இதுபற்றி அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் இன்று பேசும்பொழுது, ராகுல்ஜியை ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களில் வந்து வரவேற்க முடிவு செய்து உள்ளனர்.  இது எங்கள் கட்சி தலைவர் மீது பொது மக்கள் கொண்டிருக்கும் அன்பினை வெளிப்படுத்துகிறது என கூறியுள்ளார்.

பொது மக்களின் எண்ணங்கள், வருத்தங்கள் மற்றும் தகவல்கள் தலைவரை சென்று சேரவேண்டும் என்பதுடன் அதற்கு பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதிலும் ராகுல்ஜி உறுதியுடன் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் ஒப்பந்த சர்ச்சை: எச்ஏஎல் நிறுவன ஊழியர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
எச்ஏஎல் நிறுவன ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
2. கர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியை காங்.தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
3. நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்தி கேள்வி
நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்வது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. “என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” ராகுல் காந்திக்கு சாக்ஷி மகராஜ் சவால்
“என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” என ராகுல் காந்திக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.
5. தனித்து போட்டியிடும் மாயாவதியின் முடிவால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது: ராகுல் காந்தி
தனித்து போட்டியிடும் மாயாவதியின் முடிவால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.