தேசிய செய்திகள்

கேரளாவில் கன மழைக்கு 9 பேர் பலி + "||" + Rains in Kerala kill nine, heavy showers expected in Maharshtra

கேரளாவில் கன மழைக்கு 9 பேர் பலி

கேரளாவில் கன மழைக்கு 9 பேர் பலி
கேரளாவில் கன மழைக்கு 9 பேர் பலியாகினர்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த பருவ மழை 12-ம் தேதி வரை தொடரும் என கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக கன மழைபெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது.

மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்அட்டு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கன மழைக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.