மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை: நீர்வரத்து கிடுகிடு உயர்வு + "||" + Mullai Periyar Dam: Water Raise

முல்லை பெரியாறு அணை: நீர்வரத்து கிடுகிடு உயர்வு

முல்லை பெரியாறு அணை: நீர்வரத்து கிடுகிடு உயர்வு
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. #MullaiPeriyarDam
கேரளா,

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை காரணமாக அணைகள் நிறம்பி வருகின்றன. இந்த வகையில் தற்போது கேரள மாநலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,438 கனஅடியாக உயர்ந்துள்ளது.


கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்து 118 அடியாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று விநாடிக்கு 730 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது விநாடிக்கு 3,438 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதில் மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளின் தண்ணீர் தேவை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணகிரி அணையில் நீர்வரத்து அதிகமானதை அடுத்து, அங்கு நொடிக்கு 1600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர்திறப்பின் மூலம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. முல்லை பெரியாறு நீர் மட்டத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து ஆலோசிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.