தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு + "||" + Heavy rains in Kerala: Death toll rises to 13

கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. #Kerala #HeavyRain
திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த பருவ மழை 12-ம் தேதி வரை தொடரும் என கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக கன மழைபெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது.

பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, கன்னூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கன மழைக்கு தற்போது 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
2. வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை: மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை கொட்டியதால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கம்பத்தில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.
3. இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக வெள்ளம், 8 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நேரிட்ட வெள்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கனமழை: 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. தான்சானியா படகு விபத்து - பலி எண்ணிக்கை 200- ஆக உயர்வு
தான்சானியா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 200-ஆக உயர்ந்துள்ளது.