தேசிய செய்திகள்

”பிரதமர் மோடியை கொல்ல நிதின் கட்காரி, ஆர்எஸ்எஸ் சதி” நேரு பல்கலைகழக முன்னாள் மாணவி திடுக்கிடும் தகவல் + "||" + Shehla Rashid says RSS, Nitin Gadkari planning to kill PM Modi 'Rajiv Gandhi-style'

”பிரதமர் மோடியை கொல்ல நிதின் கட்காரி, ஆர்எஸ்எஸ் சதி” நேரு பல்கலைகழக முன்னாள் மாணவி திடுக்கிடும் தகவல்

”பிரதமர் மோடியை கொல்ல நிதின் கட்காரி, ஆர்எஸ்எஸ் சதி”  நேரு பல்கலைகழக முன்னாள் மாணவி திடுக்கிடும் தகவல்
ராஜீவ் காந்தி பாணியில் பிரதமர் மோடியை கொல்ல நிதின் கட்காரி, ஆர்.எஸ்.எஸ். சதி திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி நேரு பல்கலைகழக முன்னாள் மாணவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NitinGadkari #ShehlaRashid #PMModi
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புனே போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.   சில தினங்களுக்கு முன்பு மும்பை, நாக்பூர்,டெல்லியில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

இதில் ஒருவரது வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. பிரதமர் மோடியை மறைந்த ராஜீவ்காந்தி படுகொலை செய்தது போல் கொல்ல திட்டமிட்டிருந்தது அந்த கடிதம் மூலம் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தநிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்க முன்னாள் துணைத்தலைவர் ஷியா ரஷித் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

 மத்திய மந்திரி நிதின் கட்காரி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பாணியில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் அந்த பழியை இஸ்லாமியர்கள், கம்யூனிஸ்ட்கள், மீது போட அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறுகையில்,

இவரது கருத்துக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த விநோத குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. ஷியா மீது தேச விரோத சக்திகளுக்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.