தேசிய செய்திகள்

அகிலேஷ் யாதவ் விலை உயர்ந்து பொருட்களை அள்ளி சென்றுவிட்டார் உத்தரபிரதேச மந்திரி குற்றச்சாட்டு + "||" + Akhilesh Yadav bungalow row: UP minister seeks probe

அகிலேஷ் யாதவ் விலை உயர்ந்து பொருட்களை அள்ளி சென்றுவிட்டார் உத்தரபிரதேச மந்திரி குற்றச்சாட்டு

அகிலேஷ் யாதவ்  விலை உயர்ந்து பொருட்களை அள்ளி சென்றுவிட்டார் உத்தரபிரதேச மந்திரி குற்றச்சாட்டு
அகிலேஷ் யாதவ் அரசு பங்களாவை காலி செய்யும் போது விலை உயர்ந்த பொருட்களை அள்ளிச்சென்றுவிட்டார் என்று அம்மாநில மந்திரி ஸ்வதந்திரா தேவ் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #AkhileshYadav #BJP
லக்னோ, 

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் முன்னாள் முதல்மந்திரி முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை கடந்த சில தினங்களுக்கு முன் காலை செய்து அரசிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில், அகிலேஷ் யாதவ் அரசு பங்களாவை காலி செய்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த பொருட்கள் எடுத்துசென்று விட்டதாகவும், பங்களாவின் சமையல் கூடம், சைக்கிள் ஓட்டும் இடம், பூங்கா உள்ளிட்ட இடங்களை அவர் சேதப்படுத்தி விட்டதாகவும் இந்த செயல் சிறுபிள்ளை தனமானது என அம்மாநில பாஜக மந்திரி   ஸ்வதந்திரா தேவ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து  சமாஜ்வாதி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, பாஜக மந்திரியின் குற்றச்சாட்டு பொய்யானது என மறுத்து உள்ளது.