டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரஃபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார் + "||" + French Open tennis: Rafael Nadal won the championship

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரஃபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரஃபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஃபெல் நடால் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றினார். #FrenchOpenTennis #RafaelNadal #Champion
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரஃபெல் நடாலும் (ஸ்பெயின்), 8–ம் நிலை வீரர் டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினார்கள்.


இதில், ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம்மை 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 11 முறையாக ரஃபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

‘களிமண்’ தரையின் ராஜாவான ரஃபெல் நடால் இதற்கு முன்பு 10 முறை பிரெஞ்ச் ஓபனை வென்று இருக்கிறார். இந்த முறையும் வெற்றி பெற்று 11 முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தன் வசப்படுத்திய 2–வது நபர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்ற சாதனையாளராக திகழ்கிறார். இதன் மூலம் மொத்த கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 17-வது பட்டத்தை வென்று ஸ்பெயின் வீரர் ரஃபெல் நடால் சாதனை படைத்தார்.