தேசிய செய்திகள்

தொடர்ந்து 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு + "||" + Petrol, diesel prices cut for 13th day in a row

தொடர்ந்து 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

தொடர்ந்து 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது, வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. #Petrol #DieselPrices
புதுடெல்லி,

அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு,  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை உயர்ந்ததால்  பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதாக எண்ணை நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில், கடந்த மே 29 ஆம் தேதி முதல்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

சென்னையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 21 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.79.48 ஆகவும் டீசல் விலை 16 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.71.73-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
3. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டீசல் விலை ரூ.80- ஐ தாண்டியது
சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.80.04 க்கு விற்பனையாகிறது.
4. பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை
பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.
5. புதிய உச்சத்தை தொடுகிறது டீசல் விலை 80 ரூபாயை நெருங்கியது 5-ந்தேதி இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறியது
கடந்த 5-ந்தேதி இறங்கிய வேகத்தில் டீசல் விலை மீண்டும் ஏறியது. லிட்டர் 80 ரூபாயை நெருங்கியது.