தேசிய செய்திகள்

பிரதமரை கொல்ல சதி நடப்பதாக பாஜக அனுதாபம் தேடுகிறது: சரத் பவார் குற்றச்சாட்டு + "||" + Amid Row Over PM Assassination Plot, Sharad Pawar Says It's For "Sympathy"

பிரதமரை கொல்ல சதி நடப்பதாக பாஜக அனுதாபம் தேடுகிறது: சரத் பவார் குற்றச்சாட்டு

பிரதமரை கொல்ல சதி நடப்பதாக பாஜக அனுதாபம் தேடுகிறது: சரத் பவார் குற்றச்சாட்டு
பிரதமரை கொல்ல சதி நடப்பதாக பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். #PMmodi #SharadPawar
மும்பை,

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறி பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று புனேவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சரத்பவார் கூறியதாவது:- தலித் இயக்கத்தைச்சேர்ந்த சில முற்போக்குவாதிகள் ஒருங்கிணைந்து புனேயில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். 

ஆனால், அவர்களை நக்ஸல்கள் என முத்திரையிட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். பீமா - கோரேகான் வன்முறையின்போதும், அதில் தொடர்புடையவர்களை விடுத்து பிறரைக் கைது செய்தது காவல் துறை. இவ்வாறாக, பாஜக ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்

மக்களிடையே தற்போது அக்கட்சிக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்து வருகிறது. அதன் காரணமாக இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்களை வைத்து அனுதாபம் தேட பாஜக முயற்சிக்கிறது. அதை மக்கள் நம்பமாட்டார்கள். பாஜக விரிக்கும் வலையில் விழுந்து ஏமாறவும் மாட்டார்கள்” இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, காங்கிரஸ் கட்சியும் இதேபோன்ற கருத்தை தெரிவித்து இருந்தது. சமூகத்தில் மோடியின் செல்வாக்கு சரியும்போது எல்லாம் இத்தகைய கதைகள் உருவாக்கப்படுவது ஓர் உத்தி என காங்கிரஸ் விமர்சித்து இருந்தது.