தேசிய செய்திகள்

ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கரம்: லாரி மோதியதில் 6 மாணவர்கள் பலி + "||" + Bus Runs Over Students on Agra-Lucknow Expressway, Leaves 6 Dead

ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கரம்: லாரி மோதியதில் 6 மாணவர்கள் பலி

ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கரம்: லாரி மோதியதில் 6 மாணவர்கள் பலி
ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் லாரி மோதியதில் 6 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரண்டு பேருந்துகளின் மூலம் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து எரிபொருள் இன்றி நின்று போனது.
இதனால் பேருந்தில் இருந்த மாணவர்கள், மற்றொரு பேருந்தில் இருந்து சிறிது எரிபொருள் எடுத்து அதன் மூலம் பெட்ரோல் பங்க் வரை செல்ல திட்டமிட்டு, பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.

அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த பேருந்து, மாணவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற பேருந்தையும், ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.