தேசிய செய்திகள்

பணமோசடி செய்துவிட்டு பிரிட்டனில் தங்கியுள்ள நிரவ் மோடி, அந்நாட்டிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல் + "||" + Nirav Modi In UK Now, Seeking Asylum Over "Political Persecution": Report

பணமோசடி செய்துவிட்டு பிரிட்டனில் தங்கியுள்ள நிரவ் மோடி, அந்நாட்டிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல்

பணமோசடி செய்துவிட்டு பிரிட்டனில் தங்கியுள்ள நிரவ் மோடி, அந்நாட்டிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல்
பணமோசடி செய்துவிட்டு பிரிட்டனில் பதுங்கியுள்ள நிரவ் மோடி, அந்நாட்டிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #NiravModi
லண்டன்,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது. இந்த மோசடி புகார் வெளிச்சத்துக்கு வந்ததும், இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். 

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள நீரவ் மோடியின், கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையே அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கப்பிரிவு நாடியது. நிரவ் மோடி லண்டனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை விசாரணை முகமைகள் மேற்கொண்டுள்ளன.

இந்த சூழலில், லண்டனில் பதுங்கியுள்ள நீரவ் மோடி இங்கிலாந்திடம் அடைக்கலம் அளிக்குமாறு கோரியுள்ளதாக பிரபலநாளிதழான பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்து இங்கிலாந்து உள்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டதாகவும், தனிநபர் பற்றிய தகவலை வழங்குவது இல்லை என கூறி பிரிட்டன் அலுவலகம் மறுத்துவிட்டதாகவும் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழும் நிரவ் மோடி - வைர வியாபாரத்தில் ஈடுபடுவதும் அம்பலம்
ரூ.13 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிரபல தொழில் அதிபர் நிரவ் மோடி, லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவது அம்பலமாகி இருக்கிறது.
2. நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்
நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.
3. தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவேன்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
2022 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவேன் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
4. பணத்தை திரும்ப செலுத்துவேன் என்ற உங்களுடைய வாக்குறுதியை எப்படி நம்பமுடியும்? -விஜய் மல்லையா பதில்
வங்கிகளில் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த தயாராக உள்ளேன் என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.