தேசிய செய்திகள்

மூத்த அதிகாரி தன்னை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாக பெண் ஐஏஎஸ் அதிகாரி குற்றச்சாட்டு + "||" + Haryana woman IAS officer accuses senior of sexual harassment

மூத்த அதிகாரி தன்னை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாக பெண் ஐஏஎஸ் அதிகாரி குற்றச்சாட்டு

மூத்த அதிகாரி தன்னை பாலியல் ரீதியாக கொடுமை  படுத்தியதாக  பெண் ஐஏஎஸ் அதிகாரி குற்றச்சாட்டு
மூத்த அதிகாரி தன்னை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாக பெண் ஐஏஎஸ் அதிகாரி பேஸ்புக் மூலம் குற்றம்சாட்டி உள்ளார்.
சண்டிகர்

அரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி  ஒருவர்  தன்னை மூத்த அதிகாரி கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாக குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

இது குறித்து அந்த பெண் அதிகாரி தனது பேஸ் புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

மூத்த அதிகாரி இரவு 7 அல்லது 8 மணி வரை தாமதப்படுத்துவார். தேவையற்ற  வேலைகளை சொல்வார். வேலை குறித்து   எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்வதாகவும்  அவ்வாறு எதிர்மறை கருத்துக்களை  பதிவு செய்தால் உன் எதிர்காலம் பாதிக்கப்படும் என அச்சுறுத்தினார்.

மே 22 ம் தேதி அவர் என்னை முதலில் தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார், என் வழிகளை மாற்றிக்கொள்ளும்படி என்னிடம் சொன்னார். வாழ்க்கை முழுவதும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்.

உன் மீது புகார் கூறி வேறுதுறைக்கோ அல்லாது வேறு இடத்திற்கோ மாற்றி  விட முடியும் என கூறினார். என பேஸ் புக்கில் கூறி உள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மூத்த அதிகாரி கருத்து கூறி உள்ளார். இது ஆதாரமற்றவை என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிறார் பிரதமர் என் மகள் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை- பெண் கண்ணீர்
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் கூறுகிறார். ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட என் மகள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார்.
2. சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்
சிபிஎஸ்இ தேர்வில் முதலாவதாக வந்து ஜனாதிபதி விருது பெற்ற கல்லூரி மாணவியை சிலர் கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி!
சுமார் 120 பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. அரியானாவில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை - முதல்வர் அறிவிப்பு
அரியானா மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.