கிரிக்கெட்

மின்னல் தாக்கி கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் பலி + "||" + Struck by lightning, 21-year-old aspiring cricketer dies on field in Kolkata

மின்னல் தாக்கி கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் பலி

மின்னல் தாக்கி கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் பலி
கிரிக்கெட் பயிற்சியின் போது மின்னல் தாக்கி கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் பலியானார்.
கொல்கத்தா

 21 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் மேற் வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் செரம்போர்  விவேகானந்தா பூங்காவில் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடிய போது மின்னல் தாக்கி உயிர் இழந்தார்.

ஆல் ரவுண்டரான தேபாபரதா பால் ( வயது 21)  கொல்கத்தா கிரிக்கெட் அகாடமியில் விளையாடி வருகிறார். நேற்று தெற்கு  கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா பார்க் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பலத்த சத்தத்துடன் மின்னல் வெட்டியது. இதில் மின்னல் தாக்கி  தேபாபரதா பால்,  அதே இடத்தில் சுருண்டு  விழுந்தார். உடனடியாக மற்ற விளையாட்டு வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இத்தகவலை கிளப்பின் செயலாளர்  அப்துல் மசூத் தெரிவித்து உள்ளார்.