தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது - ப.சிதம்பரம் + "||" + Petrol, diesel, cooking gas Has angered people P.Chidambaram

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது - ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது - ப.சிதம்பரம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது என முன்னால் மத்திய அமைசார் ப.சிதம்பரம் கூறி உள்ளார். #PChidambaram
புதுடெல்லி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது ; பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது  மக்கள் அன்றாட தேவைக்கு  எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க கூடாது.

இணை செயலாளர் நியமனம் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு  பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இணை செயலாளர் நியமன விவகாரத்தில்  இனி வரும் காலத்தில்  காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பும்.

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய விவசாயிகளின் வருமானத்தில் ஏற்றம் இல்லை. 

டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடந்தாலும் ரொக்க பண பரிமாற்றத்தை தடுக்க முடியாது.

கச்சா எண்ணை விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம். 

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் -டீசலை கொண்டுவந்தால் விலை குறையும்.ரூபாய் நோட்டு விவகாரத்தால், தமிழகத்தில் மட்டும் 1 வருடத்தில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர், திருப்பூரில் ரூ.14 ஆயிரம் கோடி இழந்து உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்