தேசிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலிலும் மாயாவதி கட்சியுடன் கூட்டணி தொடரும்: அகிலேஷ் யாதவ் + "||" + Akhilesh Yadav Says Tie-Up With Mayawati In 2019 Even If It Costs Seats

பாராளுமன்ற தேர்தலிலும் மாயாவதி கட்சியுடன் கூட்டணி தொடரும்: அகிலேஷ் யாதவ்

பாராளுமன்ற தேர்தலிலும் மாயாவதி கட்சியுடன் கூட்டணி தொடரும்: அகிலேஷ் யாதவ்
பாராளுமன்ற தேர்தலிலும் மாயாவதியுடன் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #AkhileshYadav
லக்னோ,

உத்தரபிரதேசத்தில், அண்மையில் கைரானா பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம்  கட்சியின் வேட்பாளர் தபசும் ஹசனுக்கு  மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. 

பாரதீய ஜனதாவை, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வீழ்த்தின. இதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் கூட்டாக பாரதீய ஜனதாவுக்கு எதிராக திரளும் என்று அம்மாநில அரசியலில் பலமாக பேசப்பட்டது. 

இந்த நிலையில், இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்து உள்ளார். சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “ 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி தொடரும்.

சில தொகுதிகள் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கூட கூட்டணியை கண்டிப்பாக முன்னெடுத்து பாஜக தோல்வி அடைவதை உறுதி செய்வோம்” என்றார்.  அண்மையில், பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி தனது கட்சித்தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், மரியாதைக்குரிய அளவில் தொகுதிகளை பெற முடியாவிட்டால் கூட்டணியில் தொடர மாட்டோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.