மாநில செய்திகள்

சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி + "||" + Between Chennai and Salem   Make sure to set up Green Line Chief Minister of the Legislative Assembly Palanisamy

சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி

சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி
சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!! #EdappadiPalaniswami
சென்னை

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை விரைவு சாலை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.  பசுமை விரைவு சாலை அமைத்தால் சுமார் 66 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சாலை அமைந்தால் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறையும். 

இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது. 

ஆனால், இந்த திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தமிழக சட்டபேரவையில் பேசிய முதலவர் பழனிசாமி சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது தமிழக அரசு உறுதியாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி கேள்வி- சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பதால் என்ன தவறு?

தனியாருக்காகத் தான் திமுக ஆட்சியில் சாலைகள் அமைக்கப்பட்டதா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.திமுக கோட்டை விட்டதை மத்திய அரசிடம் அதிமுக அரசு போராடி பெற்றுள்ளது.

தமிழகத்தில் பல நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.75,000 கோடி ஒதுக்க மத்திய அரசு பரிசீலனை செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். பல்வேறு சாலைகள் அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.